புதுச்சேரி; புதுச்சேரியில் 97 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.
புதுச்சேரியில், பத்து நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றினால் ஒருவர் இறந்துள்ளார்.புதுச்சேரியில் நேற்று 2,096 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 33 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 36,968 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,35,898 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மீட்பு விகிதம் 97 சதவீதத்தை தாண்டியது. 289 பேர் வீடுகளிலும், 171 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் கடந்த 19ம் தேதிக்கு பிறகு இறப்பு ஏதும் இல்லாத நிலையில் நேற்று மாகியில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி உயிரிழந்தார்.இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது.