விழுப்புரம்; காணை அருகே மகள் கடத்தப்பட்டதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 பயில்கிறார். கடந்த 27 ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.பெண்ணின் தாய் தனது மகளை, லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன், வரதராஜ் ஆகியோர் கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் காணை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடிவருகின்றனர்.