விழுப்புரம்,; டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, விழுப்புரத்தில் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பரமணியன் கண்டன உரையாற்றினார்.இதில், விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், முத்துகுமரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, தண்டவராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.