கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலு பாபு, மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட அமைப்புசார ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார், பாசறை செயலாளர் ராகேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பிரபு எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி பாசறை பூத் நிர்வாகிகளுக்கு கையேடு வழங்கினார்.மேலும், வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய பாடுபடுவது. அ.தி.மு.க., ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் கூறி பழனிசாமியை மீண்டும் முதல்வர் ஆக்குவது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பாசறை நிர்வாகி ராஜிவ்காந்தி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வராஜ், வரதன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணி, ஜெ.,பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞரணி துணைச் செயலாளர் வினோத், ஒன்றிய பொருளாளர் ராஜமாணிக்கம், மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.