திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே பசுமை கிராம குழு சார்பில் பனைவிதைகள் நடப்பட்டது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தில் உள்ள குளங்களில் நேற்று 12வது வாரத்தையொட்டி பசுமை கிராம குழுவினர் 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் மற்றும் 10 மரக்கன்றுகளை நட்டனர்.இதில் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், அன்பரசன், சசிகுமார், செந்தில், பாலுபாஸ்கர், அய்யப்பன் மற்றும் பசுமை கிராம குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள் கலந்துகொண்டனர்.