கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் இராமநாதீஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு மற்றும் உற்சவம் நடைபெற்றது.கண்டாச்சிபுரம் இராமநாதீஸ்வரர் கோவிலில் கிருத்திகையையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மூலவர் ஆறுமுக சுவாமி மற்றும் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடந்தது.உற்சவ மூர்த்திகள் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் பொதுமக்களும் செய்தனர்.