பொன்னேரி; குடியிருப்பு பகுதியில், நான்கு நாட்களாக கேட்பாரின்றி இருந்த டூ - வீலரால், குடியிருப்பு வாசிகள் இடையே பரபப்பு ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி அடுத்த, அனுப்பம்பட்டு கிராமம், மெஹர்பாபா நகர் பூங்கா அருகே, நான்கு நாட்களாக பல்சர் டூ - வீலர் ஒன்று நிற்கிறது. இரண்டு நாட்கள் முன் வரை டயர்களுடன் இருந்த, டூ - வீலரில், நேற்று அவை மாயாகி உள்ளது.நான்கு நாட்களாக கேட்பாறின்றி இருக்கும் டூ - வீலரால், குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.அதை தொடர்ந்து, ஏற்கனவே இப்பகுதியில் திருடு போன டூ - வீலர் உரிமையாளர்கள் அங்கு, பார்வையிட்டு தங்களது இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு செல்கின்றனர்.வெளிநபர்கள் அடிக்கடி இப்பகுதியில் சுற்றித் திரிவதாகவும், டூ - வீலர்களும் நடைபெறுவதாகவும், குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.டூ - வீலரை கொண்டு வந்த விட்டு சென்றவர் யார். அடுத்த வந்த நாட்களில் அதிலிருந்த டயர்களை கழட்டி சென்றவர் யார் என்பது புரியாத நிலையில் உள்ளது.