கடம்பத்துார்; கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது உளுந்தை ஊராட்சி. தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊராட்சி வழியே, தினமும் அரசு, தனியார் பஸ் மற்றும் தொழிற்சாலை பஸ் கனரக வாகனம் என 7,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில், உளுந்தையிலிருந்து, தண்டலம் செல்லும் சாலையில், காட்டு கூட்டு சாலை அருகே, தனியார் தொழிற்சாலை பஸ் மற்றும் லாரிகள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.இதேபோல், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட பராசங்குபுரம் அருகே, சாலையின் இருபுறமும், கனரக லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால், இவ்வழியேபிற வாகனங்களில் வருவோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, நெடுஞ்சாலையோரம் தனியார் தொழிற்சாலை பஸ் மற்றும் லாரிகளை நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட துறையினர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.