மப்பேடு; மப்பேடு அருகே, கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மப்பேடு போலீசாருக்கு, கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்படி, கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது, இருளஞ்சேரி சுடுகாடு பகுதியில் யமஹா டூ - வீலரில் நின்று கொண்டிருந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களிடமிருந்து டூ - வீலரையும், 1,250 கிராம் கஞ்சாவையும், பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், 52, மற்றும் அகரம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 27, ஆகிய இருவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.