திருவள்ளூர்; குழந்தை திருமணம் தடுப்பது குறித்து, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் மேற்பார்வையாளருக்கு, திறன் வளர் பயிற்சி நடந்தது.சமூக பாதுகாப்பு துறை சார்பில், குழந்தைகளின் உரிமை பாதுகாத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தலை தடுத்தல் மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்த திறன்வளர் பயிற்சி நேற்று திருவள்ளூரில் நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர் மற்றும் 100க்கும் மேற்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.