வேளச்சேரி; வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகரில், குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்த வாரியம், கழிவு நீர்பிரச்னைக்கும் தீர்வு ஏற்படுத்தியது.அடையாறு மண்டலம், 178வது வார்டு, வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகரில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள, 10வது தெருவில், கடந்த சில நாட்களாக, கழிவு நீர் தேங்கி நின்றது. குடிநீரிலும் கழிவு நீர் கலந்தது.இதனால், தொற்று நோய் பரவும் அபாயம்ஏற்பட்டது. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பகுதிமக்கள் ஆதங்கப்பட்டனர்.இது குறித்து, நேற்று, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கழிவு நீர் அகற்றும்லாரியை வைத்து, அடைப்பை சரி செய்து, கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.