வண்ணாரப்பேட்டை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தனியார், 'டிவி' நிருபர் கைதானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னையில், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மதன்குமார், 35, ஷகிதா பானு, 22, உட்பட எட்டு பேரை, 10ம் தேதி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.வவஇந்த வழக்கில் தொடர்புடைய, முத்துபாண்டி உள்ளிட்ட ஆறு பேரை, சில தினங்களுக்கு முன் கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான, பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், 44, என்பவரையும் கைது செய்தனர்.போலீசாரிடம், ராஜேந்திரன் அளித்த வாக்குமூலத்தில், தானும், நண்பரும், எண்ணுார் காவல் ஆய்வாளருமான புகழேந்தியும் சேர்ந்து, தன் அலுவலகத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, வாக்குமூலம் அளித்தார்.வவஅதிர்ந்து போன காவல் துறை, ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்தனர். நவ., 24ல், மண்ணடியைச் சேர்ந்த அசாருதீன், 32, உட்பட, மேலும் இருவரை கைது செய்த போலீசார், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த, பாலியல் தரகர் பாட்ஷா என்பவரை பிடித்து விசாரித்தனர்.வவஇதில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, அரசியல்வாதிகள், மருத்துவர் என, பட்டியல் நீண்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பட்டியலை, ஐந்து ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர், தயாரித்து வருகின்றனர்.கைதானவர்களின் மொபைல் போனை கைப்பற்றி, சமீபத்தில் அவர்களை தொடர்பு கொண்டவர்களின் விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.வவஇந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தண்டையார்பேட்டை, வினோபா நகரைச் சேர்ந்த தனியார், 'டிவி' நிருபரான வினோபாஜி, 38, என்பவரை, நேற்று அதிகாலை, போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில், அடுத்தடுத்து, அரசியல், ஊடகம், காவல் துறையைச் சேர்ந்தவர்கள் கைதாகும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது பட்டியல் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.