சென்னை; இந்திய ராணுவ தென்பிராந்தியத்தின் கீழ் வரும், தக் ஷிண பாரத பகுதியின் தலைமை தளபதி, லெப்டினென்ட் ஜெனரல் பி.என்.ராவ் நேற்று ஓய்வு பெற்றார்.ராணுவத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், ராவ், ௩௮ ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். தக் ஷிண பாரத தலைமை தளபதியாக பொறுப்பேற்ற பின், இவர் பல்வேறு பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.அத்துடன், மாநில அரசுடன் நல்லுறவை வளர்த்தார். அதிதி விசிஷ்ட சேவா, யூத் சேவா உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, போர் நினைவுச் சின்னத்துக்கு சென்று, ராவ் நேற்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.பின், தன் பொறுப்புகளை முறைப்படி, தக் ஷிண பாரத பொறுப்பு தலைமை தளபதி பிரகாஷ் சந்திராவிடம் ஒப்படைத்தார்.