மாங்காடு; வங்கியில் செலுத்துவதற்காக, இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட, 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டது.மாங்காட்டைச் சேர்ந்தவர் பாஸ்கர், 40; கேட்டரிங் சர்வீஸ் நடத்துகிறார். நேற்று, தன் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காக, 1.50 லட்சம் ரூபாயை, இருசக்கர வாகனத்தின், சீட்டுக்கு அடியில் வைத்து, எடுத்துச் சென்றார்.இதையடுத்து, வங்கிக்குச் சென்று, தன் இருசக்கர வாகனத்தில் பார்த்தபோது, பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.எங்கு தேடியும் பணம் கிடைக்காததால், இந்த சம்பவம் குறித்து, மாங்காடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.