சென்னையில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, 2016ல் ஏற்பட்ட, 'வர்தா' புயல் பாதிப்பு புகைப்படங்களை, சமூக வலைதளங்களில், 'நிவர்' புயல் பாதிப்பு என பதிவிட்டு, ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களை திசை திருப்பி, ஓட்டு அரசியல் தேடிய தி.மு.க.,வினரின் செயலை, பொதுமக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
கடந்த, 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும், 2016ம் ஆண்டின், 'வர்தா' புயல், சென்னையை புரட்டி எடுத்தது.வெள்ள பாதிப்புக்கு, நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாக குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தன. அதில் கிடைத்த படிப்பினை, 'நிவர்' புயலின் போது, அரசு நிர்வாகம் முறையாக செயல்பட்டு, பாதிப்பை தடுத்தது.இருந்தாலும், சில பகுதிகளில் பாதிப்பு இருந்தது. அங்கு வசித்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதுகாக்கப்பட்டனர். உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டன.அதிருப்திஆனால், 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பு புகைப்படங்கள், வீடியோக்களை, 'நிவர்' புயல் பாதிப்பு என, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தி.மு.க.,வினர், தங்களை தரம் தாழ்த்தி கொண்டது, பொதுமக்களிடையே அக்கட்சியினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.தி.மு.க.,வில் ஐ.டி., பிரிவு உள்ளது. மாநிலம், மாவட்டம், பகுதி, வட்டம் என, நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள், கட்சி தகவல்கள் பரிமாற, 'வாட்ஸ் -ஆப்' குழுக்கள் வைத்துள்ளனர்.ஒவ்வொரு வட்டத்திலும், கட்சி தொண்டர்களை கொண்ட, வாட்ஸ் -ஆப் குழுக்கள் உள்ளன. மேலும், நலச்சங்கங்கள், ஜாதி, மத ரீதியான அமைப்புகள் மற்றும் வியாபாரி சங்கங்கள் வைத்திருக்கும், சமூக வலைதள குழுக்களிலும், தி.மு.க.,வினர் உள்ளனர்.
இதில், 2015ம் ஆண்டு பாதிப்புக்கு உள்ளான, தாம்பரம், சோழிங்கநல்லுார், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எடுத்த புகைப்படங்கள், 'நிவர்' புயல் மழை பாதிப்பாக பதிவிட்டனர்.மேலும், அடையாறு ஆற்று வெள்ளம் கரை புரண்டு, குடியிருப்பு பகுதிக்குள் புகுவது; சாலை, குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பது போன்ற வீடியோக்களை பதிவிட்டு, ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்தும் தெரிவித்திருந்தனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது: சென்னையில், ஒவ்வொரு பருவ மழையின் போதும், பீதியில் உறைந்திருப்போம். 2015ல் ஏற்பட்ட பாதிப்பு போல், 'நிவர்' புயல் மழையில் ஏற்படாத வகையில், அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர். போலி அரசியல்சில குறைகள் இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மக்களை, ஆளுங்கட்சிக்கு எதிராக திருப்பி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க., செய்த வேலை தான், போலி வெள்ள பாதிப்பு பதிவுகள். பதிவிட்ட சில மணி நேரத்தில், போலி பதிவு என அனைவரும் தெரிந்து கொண்டனர். நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்க, அதற்கு குரல் கொடுத்து கட்சியை வளர்க்க முடியாத தி.மு.க., போலி அரசியல் தேடுவது, சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.