போலீஸ் டைரி.....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2020
05:47

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்மதுரவாயல்: பொழிச்சலுாரைச் சேர்ந்தவர் ராமர், 46; மீன் வியாபாரி. நேற்று முன்தினம், வானகரம் மீன் மார்க்கெட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், ராமரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 5,300 ரூபாய் பறித்து சென்றனர். இது குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதில், நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ், 19, மற்றும், 14 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 5,300 ரூபாய் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.தலைமறைவு குற்றவாளி பிடிபட்டார்சேலையூர்: கிழக்கு தாம்பரம், திருவஞ்சேரியைச் சேர்ந்தவர், மார்டின், 22. இவர், பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில், ஜூன், 6ல் நடந்த கொலை வழக்கில், சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்து வந்தார். இவரை, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், சேலையூரில் வைத்து, தெற்கு மண்டல இணை கமிஷனர் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.பெயின்டரை தாக்கியர் கைதுவிருகம்பாக்கம்: புரசைவாக்கம், கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ், 30; பெயின்டர். இவர், நேற்று முன்தினம், தன்னுடன் வேலை செய்யும் விருகம்பாக்கம், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த, மூர்த்தி, 34, என்பவருடன், விருகம்பாக்கம், ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது, சுரேஷ், மூர்த்தியிடம் சம்பள பாக்கியை கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூர்த்தி, இரும்பு கம்பியால், சுரேஷை சரமாரியாக தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த சுரேஷ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விருகம்பாக்கம் போலீசார், மூர்த்தியை கைது செய்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.பைக் திருடனுக்கு 'காப்பு!'கோயம்பேடு: திருவேற்காடு, சக்திவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜு, 39. இவர், 29ம் தேதி, டூ - வீலரில், கோயம்பேடு மார்க்கெட் சென்றார். அங்கு அவரது பைக் திருடு போனது. கோயம்பேடு போலீசாரின் விசாரணையில், சண்முகபுரம், அண்ணா இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், 24, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்த போலீசார், டூ - வீலரை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்றோர் அகப்பட்டனர் டி.பி.சத்திரம்: கிழக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சீனிவாசன், நேற்று முன்தினம் இரவு, சிந்தாமணி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த ஆய்வாளர், டி.பி.,சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அண்ணா நகரைச் சேர்ந்த பிரவீன், 30, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.* ஐ.சி.எப்.: ஐ.சி.எப்., போலீசார், நேற்று காலை அம்பேத்கர் சாலையில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர். இதில், ஷெனாய் நகரைச் சேர்ந்த மார்டின் ராஜ், 27, ஜான்சன், 25, என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், 2.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.* சங்கர் நகர்: பல்லாவரம் அடுத்த, பம்மல், கருப்பன் தெருவில், வடமாநில வாலிபர் ஒருவர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, சங்கர் நகர், காவல் நிலைய போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பிண்டு ஷேக், 28, என்பவரை, நேற்று கைது செய்த போலீசார், 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கடையின் பூட்டை உடைத்து திருட்டுமயிலாப்பூர்: ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர், ஜான்சன், 57. இவர், மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில், பெட்டி கடை வைத்துள்ளார். நேற்று காலை, கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 25 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X