சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று காலை, வாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கையை போலீசார் கைது செய்தனர். சேலம், கிச்சிப்பாளையம், ஓந்தான்காட்டை சேர்ந்தவர் நடராஜ், 22. இவர் நேற்று காலை, 5:00 மணிக்கு வெளியூர் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். அங்கு வந்த சேலம், ரெட்டியூரை சேர்ந்த திருநங்கை மீனா, 21, நடராஜை அழைத்துள்ளார். நடராஜ் வர மறுக்கவே, பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நிலையில், அவரை தாக்க முயற்சித்துள்ளார். இது குறித்து நடராஜ், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், திருநங்கை மீனாவை கைது செய்தனர்.