தலைவாசல்: தலைவாசல் அருகே, ஓட்டலில் பணம் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார். தலைவாசல், தேவியாக்குறிச்சி பகுதியில், ஓட்டல் நடத்தி வருபவர் வேல்முருகன், 42. இவரது கடை அருகில், நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடையின் ஷட்டர், உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகே சென்ற போது, ஷட்டரை உடைத்து, ஒருவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். விசாரணை நடத்தியதில், அவர் தஞ்சாவூரை சேர்ந்த பெரியசாமி, 58, என்பது தெரியவந்தது. கடையில் இருந்து திருடிய, 13 ஆயிரத்து, 200 ரூபாயை, அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். வேல்முருகன் அளித்த புகார்படி, வழக்கு பதிவு செய்த தலைவாசல் போலீசார், பெரியசாமியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.