தலைவாசல்: தலைவாசல் அருகே, அவரைக்காய் விலை உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல், கள்ளக்குறிச்சி, கருமந்துறை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரைக்காய் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. தலைவாசல் சுற்றுவட்டாரங்களில், பச்சை அவரை ரகம் அதிகளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் காய்கள், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் கொண்டு வரப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன்பு, அவரைக்காய் ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்றது. வெளியூர் ஆர்டர்களுக்கு, அவரை அதிகளவில் அனுப்பப்படுவதால், தேவை அதிகரித்துள்ளது. இதனால் அவரை கொள்முதல் செய்ய போட்டி ஏற்படுவதால், விலையும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ, 60 ரூபாய்க்கு விற்றது.