மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 100.93 அடியாக சற்று அதிகரித்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த பருவமழையால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,976 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 7,126 கனஅடியாக அதிகரித்தது. குடிநீருக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 100.55 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 100.93 அடியாக உயர்ந்தது.