டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் பலி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2020
14:13

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள கூடுதுறை மலையை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் விஜயகுமார், 12. வெல்ஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகே இருப்பவர் டிராக்டர் டிரைவர் விஜயன், 27. விஜயகுமார், விஜயன் ஆகிய இருவரும், நெல்லித்துறை நந்தவனப்புதூரில் சரவணன் தோட்டத்தில் வாழைக்கன்று நடுவதற்கு, ரோட்டாவேட்டர் டிராக்டரில் நிலத்தை உழுதனர். அப்போது டிராக்டர் மீது அமர்ந்திருந்த பள்ளி மாணவன் விஜயகுமார், தவறிக் கீழே விழுந்து, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X