மதுராந்தகம் : மழை நேரத்தில், நெல்வாய் கூட்டுச்சாலை பஸ் நிறுத்த பகுதி, சேறும், சகதியுமாக ஆவதால் பயணியர் அவதிக்கு உள்ளாகின்றனர்.
உத்திரமேரூர்-, புக்கத்துறை சாலையில், நெல்வாய் கூட்டுச்சாலை உள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள, 10க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர், இப்பகுதி பஸ் நிறுத்தத்திற்கு வந்து, செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ் பிடித்து செல்கின்றனர்.இந்த நிறுத்தம், தாழ்வான பகுதியாக உள்ளதால், மழை நேரத்தில்தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறுகிறது. தவிர, நிழற்குடை கட்டடம் முன் தண்ணீர் தேங்குவதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
எனவே, பஸ் நிறுத்த பகுதியைச் சுற்றி, மண் கொட்டி, மழைநீர் தேங்காதவாறு சீரமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.