உலர் தீவனம் சேதம் ஏற்படுவதை தடுப்பது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் அறிவியல் வேளாண் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் நிஷா கூறியதாவது: ஆடு, மாடு வளர்ப்பில், உலர் தீவனம் பங்களிப்பு மிகவும் அவசியம். குறிப்பாக, கோடை மற்றும் மழைக்காலம், தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.
கோடை காலத்தில், தீவனம் கருகியும், மழைக்காலங்களில் தீவனம் ஈரமாகியும் மாடுகள் உண்ணுவதற்கு, லாயக்கற்ற நிலையில் இருக்கும்.இதனால், மாடு வளர்க்கும் விவசாயிகள், உலர் தீவனம் என, அழைக்கப்படும் வைக்கோலை, நிலத்தில் சேகரித்து வைத்திருப்பர்.'போர்' என அழைக்கப்படும், வைக்கோல் குவியல் போடும்போது, நிலத்தில் இருந்து, சற்று உயரமாக கற்களை அடுக்கி, அதன் மீது தடுப்பு கட்டை வைத்து, வைக்கோல் சேகரிக்க வேண்டும்.இது மழைக்காலத்தில், தண்ணீர் புகுந்தாலும், தீவனம் சேதமாகாது. மாடுகளுக்கு தட்டுப்பாடு இன்றி தீவனம் வழங்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 99405 42371