கோழிகளுக்கு மூச்சு குழாய் நோய் தடுப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய கால்நடை உதவி பேராசிரியர் கோபி கூறியதாவது:கோழிகளுக்கு, மூச்சு குழாய் நோய், வைரஸ் தொற்று கிருமிகளால் ஏற்படுகிறது.
இந்நோய், கோழி குஞ்சு மற்றும் வளர்ந்த கோழிகள் என, பல தரப்பு கோழிகளுக்கு வரும். குறிப்பாக, குளிர் காலங்களில், அதிகம் பாதிக்கப்படும்.இதனால், கோழிகளுக்கு தும்மல், இருமல் ஆகியவை மூலமாக, பிற கோழிகளுக்கு இந்நோய் பரவும். மேலும், மூச்சு விடுதல், மூக்கு, கண் ஆகிய பகுதிகளில் இருந்து, நீர் கசிவு ஏற்படும். சில நேரங்களில், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, கோழிகள் இறக்க நேரிடும்.இது போன்ற நோய் கோழிகளுக்கு, கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு, முறையான ஆலோசனை மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளலாம். இதன் மூலமாக, கோழி வளர்ப்பில் இழப்பு இன்றி, வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 75300 52315