கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தின்கீழ் பள்ளி செல்லாதவர்களுக்கு கல்வி கற்பித்தல், நேற்று முதல் துவங்கி, நடந்து வருகிறது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், 'கற்போம் எழுதுவோம்' இயக்கம் என்ற திட்டத்தின்கீழ், வயது வந்தோர் கல்வி திட்டத்தின்கீழ், 'கல்லாமையை இல்லாமையாக்குவோம்' என்பதை நிறைவேற்றும் வகையில், கல்வி கற்பித்தல், நேற்று முதல் துவங்கி, கடம்பத்துார் ஒன்றியத்தில் நடந்து வருகிறது.கடம்பத்துார் ஒன்றி யத்தில், 46 கல்வி மையங்களில் உள்ள தன்னார்வலர்கள் மூலம், கற்பித்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள கல்வி கற்றல் மையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
மேற்பார்வையாளர் சொர்ணத்தாய், கல்வி பயிற்றுனர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் கிரிஜா, தேவநாதன் ஆகியோர் தலைமை வகித்து, கற்றல் முகாமை துவக்கி வைத்தனர்.இதில், கல்வி கற்க வந்தவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு எழுத்தறி மற்றும் எண்ணறிவு கற்பிக்கப் படும் என, மேற்பார்வையாளர் சொர்ணத்தாய் தெரிவித்தார்.இதேபோல், சத்தரை ஊராட்சியில், கற்றல் பயிற்சி மையத்தில் நடந்த பயிற்சியை, திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் ரமணா, புத்தகங்கள் வழங்கி, துவக்கி வைத்தார்.