குறுகிய நிலத்தில், ஏழு விதமான காய்கறிகள் சாகுபடி குறித்து, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ். வீரராகவன் கூறியதாவது:நான், 25 சென்ட் நிலத்தில், கத்திரி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, பீர்க்கன், பாகல், புடல் ஆகிய ஏழு வித காய்கறி பயிரிட்டேன்.கொடி வகை காய்கறிகளை பந்தலிலும், செடி வகை காய்கறிகளை பந்தலுக்கு கீழேயும், சாகுபடி செய்தேன்.
அனைத்து காய்கறி மூலமாக, 30 ஆயிரம் ரூபாய் வரையில், வருவாய் கிடைத்தது.ஒரே விதமாக, காய்கறி சாகுபடி செய்யும் போது, அதே, 25 சென்ட் நிலத்தில், மூன்று மாதங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது.பல வித காய்கறிகளை சாகுபடி செய்தும் போது, 20 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. 1 ஏக்கருக்கு, 1.20 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.ஒரு ஆண்டிற்கு, இரு பருவம் காய்கறி பயிரிட்டால் போதும். ஆண்டிற்கு, 2.40 லட்ச ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98941 20278