சத்தரை : சத்தரை ஊராட்சியில், 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமூக விலகலின்றி நிவாரணம் வழங்கப்பட்டது.
கடம்பத்துார் ஒன்றியம், சத்தரை ஊராட்சியில், 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேற்று ஊராட்சி மன்ற தலைவரின் சொந்த நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டது. விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி முன்னிலை வகிக்க, மேற்கு மாவட்டச் செயலர் ரமணா, தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.நிவாரண பொருட்களை, பாதிக்கப்பட்டவர்கள் சமூக விலகலின்றி வாங்கியது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.இனி வரும் காலங்களில், நிவாரண பொருட்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், வீடு தேடி வழங்க, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.