மாமல்லபுரம் : உழவு நிலத்தில், புழுக்கள், பூச்சிகளை உண்ண, பறவைகள் குவிகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நெற்பயிர் அறுவடை, கரும்பு வெட்டு முடிந்து, வேர்க்கடலை, தர்பூசணி என, மாற்றுப்பயிர் சாகுபடி துவங்கும். அடுத்தடுத்த சாகுபடிக்காக, விவசாயிகள், நிலத்தை பண்படுத்த உழுவர்.உழவின்போது, நிலத்தடி பகுதியிலிருந்து, மேற்புறம் வரை உழுது கிளறி, அடிப்பகுதி புழுக்கள், பூச்சிகள் வெளியேறும். உழவு நிலத்தில், இவற்றை உண்ண, சாம்பல், செங்கால், வர்ண நாரை, கொக்கு, குருவி உள்ளிட்ட பறவைகள், குழுவாக முகாமிடும். தற்போதும், பல பகுதிகளில், நிலம் உழுது, இவை, இரை தேடி படையெடுக்கின்றன. குழுவாக, உயர பறந்து, தாழ இறங்கி பரவசப்படுத்துகின்றன.