கும்மிடிப்பூண்டி : -கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து, சென்னை நோக்கி, ஒருவர் பயணித்து வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 1 கிலோ கஞ்சா சிக்கியது.அதை கடத்திய, சென்னை, தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர், 24, என்பவரை, கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.