மாமல்லபுரம் : தென்னிந்திய, ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சி.பி.மொகந்தி, மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்களை, கண்டு ரசித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 7ம் நுாற்றாண்டு, பல்லவர் கால தொல்லியல் சின்னங்களை காண, பயணியர் வருவது ஒருபுறமிருக்க, மத்திய அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு அதிபர், பிரதமர், துாதர் உள்ளிட்டோரும் வருகின்றனர்.நேற்று, தென்னிந்திய, ராணுவ லெப்டினன்ட் ஜெனரல், சி.பி.மொகந்தி, குடும்பத்தினருடன், சுற்றுலா வந்தார். அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக்கோவில் உள்ளிட்ட சிற்பங்களை, அவர்கள் கண்டுகளித்தனர்.
தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராம், மாமல்லபுரம் அலுவலர் சரவணன், சிற்பங்கள் சரித்திர பின்னணி, தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழங்காலத்தில், பல்லவர் உருவாக்கிய கலைப்படைப்பு சாதனையை அவர்களுக்கு விளக்கினர்.