திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், குழந்தைகளுக்கான, உதடு பிளவு சிகிச்சை முகாம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியில், பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும், தொடக்க நிலை இடையீட்டு சிகிச்சை மையம், செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின், 14 வட்டங்களில் இருந்தும், பிறந்தது முதல், 18 வயது உடைய, குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தி, இதயம், கண்புரை கோளாறு உள்ளிட்ட குறைபாடுகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, உதடு பிளவு மற்றும் அன்ன பிளவு குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர், மருத்துவர் அரசி தொடங்கி வைத்தார்.
மருத்துவர்கள் ஜெகதீஷ், ரேகா ஆகியோர், குழந்தைகளை பரிசோதனை நடத்தினர். முகாமிற்கு வந்திருந்த, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தி, அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.மேலும், குழந்தைகள் மற்றும் அவர்கள் உடன் வந்த பெற்றோருக்கு, உணவு அளிக்கப்பட்டது.