திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த, தண்டலம் கிராமம், ஓ.எம்.ஆர்., சாலையில், கங்கைஅம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலின் வெளிப்புற சுவற்று பகுதியான மேற்கில், பிரம்மகி அம்மன், வடக்கில் துர்கை அம்மன், தெற்கில் சாமுண்டி அம்மன் என, 1.5 அடியில், கற்சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை, வழக்கம்போல், கோவிலுக்கு வந்த பக்தர்கள், வளாகத்தை சுற்றியபோது, மேற்கண்ட மூன்று அம்மன் கற்சிலைகள் காணாமல் போனதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட மூன்று கற்சிலைகளின் மதிப்பு, 15 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என, கூறப்படுகிறது.