திருப்போரூர் : மேலக்கோட்டையூரில், பொதுமக்கள் நேற்று, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கேளம்பாக்கம் அடுத்த, மேலக்கோட்டையூர் ஊராட்சியில், போலீஸ் குடியிருப்பு, விளையாட்டு பல்கலைக்கழகம், மக்கள் வசிக்கும் ராஜீவ் காந்தி நகர் பகுதி உள்ளன.இங்கு, மீதம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், சென்னை தலைமை செயலக ஊழியர்கள் குடியிருப்பதற்காக இடம் ஒதுக்க, அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக, மேற்கண்ட பகுதியில், வருவாய்த் துறையினர் நேற்று, இடத்தை அளவீடு செய்தனர்.
இதையறிந்த, ராஜீவ் காந்தி நகர் மக்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்பை அகற்றுவதற்காக, அளவீடு செய்கின்றனர் என கருதி, 100க்கும் மேற்பட்டோர், கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலையில் அமர்ந்து, மறியல் செய்தனர்.தகவல் அறிந்த, தாழம்பூர் போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.