திருவொற்றியூர் : மொபைல் போன் குறுஞ்செய்தியில் வந்த, 'லிங்கை' தொட்டதால், வங்கி கணக்கில் இருந்து, 98 ஆயிரம் ரூபாய் பணம் மாயமான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை, திருவொற்றியூர், இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆர்த்தி, 46. இவரது மொபைல் போனுக்கு, ஆதார் மற்றும் பான் அட்டை, 'அப்டேட்' செய்வதாக, குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. குறுஞ்செய்தியில் இருந்த, 'லிங்க்' வழியாக நுழைந்ததும், ஆதார் மற்றும் பான் கார்டின், பின் நம்பரை பதிவிட கோரியது. பதிவிட்டதும், ஓ.டி.பி., எண் வந்தது.ஓ.டி.பி., எண்ணை பதிவிட்டதும், வங்கி கணக்கில், 98 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானது. அதிர்ச்சியடைந்த ஆர்த்தி, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.