சென்னை : சென்னையில், ஆண்களுக்கான நவீன கருத்தடை வரும், 4ம் தேதி வரை, நகர்ப்புற சமுதாய மருத்துவ மையங்களில் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள், டிச., 4ம் தேதி வரை, மூன்று நகர்ப்புற சமுதாய மையங்களில், காலை, 8:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடைபெறுகிறது.நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு, 1,100 ரூபாய் மற்றும் ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு, 200 ரூபாயை, அரசு ஊக்கத்தொகையாக வழங்குகிறது.இம்முகாம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் விழிப்புணர்வு வாகனங்களை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், ரிப்பன் மாளிகையில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி இணை கமிஷனர் திவ்யதர்ஷினி, மாநகர மருத்துவ அலுவலர் ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.