சென்னை : 'சென்னையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.இதனால், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தடையை மீறி எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது.சாலைகள், தெருக்கள் மற்றும் திறந்தவெளிகள் என, எந்த இடத்திலும் அவசியமின்றி கூட்டம் கூடுதல் கூடாது. மீறுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.