திருவேற்காடு : சென்னை, திருவேற்காடு, பெருமாள் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 23; தனியார் நிறுவன ஊழியர். அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினிஷால், 19, என்ற பெண்ணுக்கும், அக்டோபரில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தனியாக இருந்த வினிஷால், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், தனியார் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், அவரது பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.