சென்னை : அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில், இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக, தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட, சமூக பாதுகாப்பு திட்ட, தொழிலாளர் நலத் துறை உதவி கமிஷனர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.கொரோனா காலத்தில், நோய் தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மார்ச், 1 முதல் அக்., 24 வரை உள்ள காலத்தில், வருவாய் ஆய்வாளரிடம் சான்றிதழ்கள் பெற்று, விண்ணப்பங்களை தொழிற்சங்கங்கள் கைவசம் வைத்துள்ளதாக தெரிகிறது.அவர்கள், சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை, தி.நகரில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டம், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில், நாளைக்குள் கொடுத்தால், இணையதளத்தில் பதிவு செய்து தரப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.