கொளத்துார் ஏரி ஆக்கிரமிப்புகள்: ஆய்வுக்கு நிபுணர் குழு அமைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2020
23:02

சென்னை : கொளத்துார் ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, நிபுணர்கள் குழுவை அமைத்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



சென்னை, கொளத்துார் ஏரியில், 3,000 ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஏரியின் குறுக்கே, 200 அடி சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, நாளிதழ் செய்தியை தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீர்நிலைகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது, மாநில அரசின் முக்கிய கடமை. ஆனால், நீர்நிலைக்கு நடுவிலேயே அரசு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.



இதனால், ஏரியின் நீர் கொள்திறன் குறைவதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டுவதும் பாதிக்கப்படும். விதிகளை மீறிய ஆக்கிரமிப்புகளால், ஏரியில் பரப்பு குறையும் போது, வெள்ளம் போன்ற பேரிடர்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.இதுதொடர்பாக ஆய்வு செய்ய, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத்துறை, குடிநீர் வாரியம், சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் மூத்த அதிகாரிகள், அண்ணா பல்கலையின் நீரீயல் பேராசிரியர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.



இந்த குழுவினர், ஏரியின் தற்போதைய நிலை, விதிமீறல்கள் இருந்தால், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வருவாய்த் துறை ஆவணங்களின்படி, தற்போது எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன, அவை எத்தகைய ஆக்கிரமிப்புகள், ஏரியை மீட்டெடுக்க செய்ய வேண்டியது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகள், ஏரியில் உள்ள நீர் மாசுபட்டுள்ளதா, ஏரியில் விதிகளை மீறி குப்பைகள் கொட்டப்படுகிறதா, தொழிற்சாலை கழிவுகள் ஏதேனும் விடப்படுகிறதா உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, 2021 ஜன., 12ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X