ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வு கடைசி நாளில் ஏராளமானோர் தரிசனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2020
23:05

திருவொற்றியூர் : ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வின் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் உட்பட ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.



சென்னை, திருவொற்றி யூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு, ஆண்டு முழுதும், மூலவர் ஆதிபுரீஸ்வரர், கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.ஆண்டின், கார்த்திகை மாதம், பவுர்ணமி தினத்தன்று கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.கையில் வழங்கினர்இவ்வாண்டு, நவ., 29ம் தேதி மாலை கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெற்றது.



தொடர்ந்து, நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.ஆண்டுக்கொருமுறை மட்டும் நடைபெறும் இந்த அரிய நிகழ்வை காண, தமிழகம் முழுதும், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவர். இம்முறை, கொரோனா பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறை படி, கவசம் திறப்பு நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, முக கவசம், தனிமனித இடைவெளி, உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. வழக்கமாக நெற்றியில் வைத்து விடப்படும் புணுகு சாம்பிராணி தைல பிரசாதம், இம்முறை கையில் வழங்கப்பட்டன.



காத்திருக்க வேண்டும் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் சண்முகம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, வேலுமணி, திருவேற்காடு கோவில் இணை கமிஷனர் லட்சுமணன், மயிலாப்பூர் கோவில் இணை கமிஷனர் காவேரி, வடபழநி கோவில் தக்கார் ஆதிமூலம், மாங்காடு கோவில் தக்கார் சீனிவாச முதலியார் உட்பட, ஏராளமானோர் பங்கேற்று, ஆதி புரீஸ்வரரை கவசமின்றி தரிசனம் செய்தனர்.நேற்றிரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது.



இனி, ஆதிபுரீஸ்வரை கவசமின்றி தரிசிக்க, ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.திருக்கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி தலைமையில், 160க்கும் மேற்பட்ட போலீசார், 300 ஊழியர்கள் உட்பட, 500க்கும் மேற்பட்டோர், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X