மடிப்பாக்கம் : மடிப்பாக்கம் பகுதியில், மூன்று சக்கர வாகனங்கள் பழுதடைந்ததால், வீடு, வீடாக குப்பை சேகரிக்க முடியாமல், துப்புரவு தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 187வது வார்டு, மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் பகுதியில், நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.அப்பகுதியில், துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக மூன்று சக்கர வாகனங்கள் மூலம் குப்பை சேகரித்து வந்தனர். சில வாகனங்கள், இரண்டு மாதங்களுக்கு மேல் பாழடைந்த நிலையிலேயே உள்ளன.அவை, இன்றளவிலும் சீரமைக்கப்படவில்லை. இதனால், துப்புரவு ஊழியர்கள், வீடு, வீடாக நடந்து சென்று, குப்பை சேகரித்து வருகின்றனர்.
இதனால், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.