விழுப்புரம் : விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில், தாறுமாறாக மாடுகள் நுழைவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் திருச்சி, சென்னை, புதுச்சேரி, திருக்கோவிலுார் மார்க்கங்களை இணைக்கும் பகுதியாக கிக்னல் உள்ளது. சிக்னலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரங்களில் பயணித்து இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது, மாடுகள் பல திடீரென சாலையின் குறுக்கே வந்து நிற்பது, வாகனங்களை ஓட்டி செல்வோரை அச்சுறுத்தும் வகையில் ஓடுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் பலர் அந்த மாடுகளின் மீது மோதாமல் இருப்பதற்காக வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். கால்நடைகள் வராமல் அப்புறப்படுத்த வேண்டிய, நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதை, நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து, சாலைகளில் வீணாக சுற்றும் மாடுகளை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.