மயிலம் : மயிலம் வட்டார வள மையம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் மற்றும் கற்போம் எழுதுவோம் திட்ட வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
செண்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு மயிலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர்கள் நீலா,ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் தீபாஞ்சான் வரவேற்றார்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கலந்து கொண்டு வகுப்புகளை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசுகையில், மாவட்டத்தில் 15 வயதுக்கு மேலே உள்ள படிக்காதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு -படிக்கவும் எழுதவும் பயிற்சி கொடுக்க பகுப்புகள் துவங்குகிறது.இதனால் அவர்களுக்கு அஞ்சலகம், வங்கிகளுக்கு சென்றால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது போன்ற பல்வேறு கட்ட பயிற்சிகள் தன்னார்வல ஆசிரியர் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு அளிக்கப்படுகிறது.
மயிலம் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 880 பேர் கற்பித்தல் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர் எனப் பேசினார். பின் பயிற்சி புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தன்னார்வலர் பயிற்றுநர் சாந்தகுமாரி, அரசு பள்ளி ஆசிரியைகள் வானதி, உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.