திண்டிவனம் : சென்னையில் பா.ம.க.,வினர், நடத்திய போராட்டத்தையொட்டி, மொரட்டாண்டி டோல்கேட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னையில் பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.,வினர் வாகனங்களில் சென்றனர். இதே போன்று, புதுச்சேரி வழியாக ஏராளமான பா.ம.க.,வினர் நேற்று சென்னைக்கு சென்றனர்.
இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி டோல்கேட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.வானூர் இன்ஸ்பெக்டர் சித்ரா, ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் தலைமையில் போலீசார் வாகனங்களை சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.