விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி நகர அ.தி.மு.க., சார்பில் மகளிர் அணி பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டியில் நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு நகரசெயலாளர் பூர்ணராவ் தலைமை தாங்கி ஒவ்வொரு வார்டு களிலும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் அமைச்சர் சண்முகம் உத்தரவு படி மகளிர் அணி பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் பணிக்கு தயாராக வேண்டும் என ஆலோசனைகளை வழங்கி, வார்டுசெயலாளர் களிடம் பூத் கமிட்டிவிண்ணப்பத்தை வழங்கினார்.
நகர தலைவர் விஜயகுமார், நகர பேரவை செயலாளர் பலராமன், நகர இலக்கிய அணிகண்ணன், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சங்கர், நகர இளைஞர் அணி வழக்கறிஞர்பிரகாஷ், ராதாகிருஷ்ணன், முருகன், இயக்குனர் வாசு, சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்.