கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி மயானத்தில் தேங்கிய குப்பைகள் தி.மு.க., சார்பில் அகற்றும் பணி துவங்கியது.
கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சி மின் மயானத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.தற்போது பெய்து வரும் மழையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதையொட்டிகள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மயானத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக்கோரி, சில தினங்களுக்கு முன் கலெக்டர் கிரண் குராலாவிடம் மனு அளித்தார். ஆனால் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது.
இதையொட்டி குப்பைகள் அகற்றும் பணியை நேற்று தொடங்கி வைத்து, நகராட்சி சார்பில் குப்பைகள் அகற்றப்படவில்லையெனில், தி.மு.க., சார்பில் அகற்றப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்த குப்பைகள் அகற்றப்பட்டது.நகர செயலாளர் சுப்ராயலு, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, லியாகத்அலி உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.