விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றிய மா.கம்யூ., சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்நடந்தது.
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு முத்துக்குமரன், மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி, சித்ரா, ஒன்றிய குழு குமார், ரமேஷ், சேகர், அய்யாக்கண்ணு ஆகியோர் டில்லியில் விவசாயிகள் மீது மத்திய அரசு நடத்திய தாக்குதலைகண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பேசினர். ஒன்றியத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.