திண்டிவனம் : திண்டிவனத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர் உதவியாளர் ஆகியோருக்கான நேர்முக தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றது.
இதே போல் திண்டிவனம் ஜெயபுரத்திலுள்ள செயின்ட் ஜோசப் குளூணி பள்ளியில் நேற்று பிற்பகல், நேர்காணல் தேர்வு நடந்தது. நேற்று நடந்த முதற்கட்ட நேர்காணலுக்கு 450 பேர்களுக்கு அழைப்பு அனுப்பபட்டிருந்தது. இதே போல் தினந்தோறும் 450 பேர்களுக்கு நேர்காணல் நடக்க உள்ளது.
நேற்று திண்டிவனம் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் குருசாமி மேற்பார்வையில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மூலம், நேர்காணலுக்கு வந்திருந்த சான்றிதழ்கள் சரிபார்த்த பின், மூன்று பேர் கொண்டு நேர் முகத்தேர்வு குழுவினரிடம் நேர்காணல் நடந்தது.
நேற்று துவங்கிய நேர்காணல் வரும் 11 ம் தேதி வரை நடக்கின்றது. அடுத்த நாள்(12ம் தேதி) நேர்காணலில் கலந்து கொள்ளாமல் விடுபட்டவர்களுக்கான நேர்காணல் கடைசியாக நடக்க உள்ளது.