விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி காவல் துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் நேற்று முன்தினம் இரவு7:00 மணிக்கு திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார். பின்னர் பஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்தஆட்டோ டிரைவர்களை அழைத்து, ஆட்டோக்கள் அனைத்தும் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும். கண்ட இடங்களில் நிறுத்தி பொதுமக்களுக்கும், சாலையில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது என்பதுபோன்ற ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வியாபாரிகள் தங்கள் கடைஎதிரே சாலையில் வைத்திருந்த விளம்பர போர்டுகளை பறிமுதல் செய்து வேனில் ஏற்றியும், கடைகள் எதிரே போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த கூடாது என பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்தனர்.