திண்டிவனம் : அ.தி.மு.க.,தகவல் தொழில்நுட்ப பிரிவின் வேலுார் மண்டல தலைவராக, திண்டிவனத்தை சேர்ந்த காமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.,தகவல் தொழில்நுட்ப பிரிவு, சென்ன, வேலுார், கோவை, திருச்சி, மதுரை ஆகிய ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வேலுார் மண்டல அ.தி.மு.க.,தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக, திண்டிவனம் வாணிப்பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த காமேஷ், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார்.